தலைமைத்துவம்

தலைமைத்துவம்

Back
சணச இயக்குனர் சபை
கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய
தலைவர் / முகாமைத்துவ இயக்குனர்

சணச குழுமத்தின் தலைவர் ஆன கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்கள் புதுமை சிந்தனையாளர் மட்டுமல்லாது இலங்கை கூட்டாண்மை நடவடிக்கையின் அடிப்படை அங்கத்தவர் ஆவார்.கலாநிதி.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்கள் 1965ம்ஆண்டு ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகதில் பட்டதாரி ஆகவும்,இலங்கை கூட்டாண்மை நடவடிக்கையின் முன்னேற்றத்திற்கு சேவை ஆற்றியமைக்காக யோமன் சேவை நிறுவனத்தால் ருகுணு பல்கலைகழகத்தின் மூலம் கலாநிதி பட்டத்தினையும்,1996ம் ஆண்டு இலங்கையின் அதி உயர் விருதும் தேசிய ரீதியில் அதிக கௌரவம் வாய்ந்ததும்,ஜனாதிபதி விருதுமான விஸ்வப்ரசதினி விருதையும் பெற்றுள்ளார்.

பேராசிரியர்.ஜே.எம்.யு.கே.ஜயசிங்க
இயக்குனர்

பேராசிரியர்.ஜே.எம்.யு.கே.ஜயசிங்க சுதந்திர இயக்குனர் ஆக சபைக்கு 2013 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டார். இவர் வயம்ப பல்கலைகழகத்தில் பொருளாதாரமும் வணிக முகாமைத்துவம் மற்றும் விவசாயம் ஆகியனவற்றின் பேராசிரியர் ஆக கடமையாற்றுவதுடன்,பேராதனை பல்கலைக்கழகதில் விவசாய பிரிவில் பச்சிலர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் பட்டங்களையும் குஎல்ப் பல்கலைகழகத்தில் கோட்பாட்டு ஆராய்வு பட்டப்படிப்பில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கலாநிதி.செந்தில்வேல்
இயக்குனர்

கலாநிதி.செந்தில்வேல்அவர்கள் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் சபைக்கு இணைக்கப்பட்டார்.அவர் நிறைவேற்று அல்லாத சுதந்திர இயக்குனராக இருப்பதோடு, எஸ்.எம்.பி.லீசிங் பிஎல்சி, த பைனான்ஸ் பிஎல்சி,அமானா டகாபுல் பிஎல்சி, சிடிபி பினான்ஸ், எம்பிஎஸ்எல் சேமிப்பு வங்கி, நேஷன் லங்கா பிஎல்சி ஆகிய நிறுவனங்களிலும் நிறைவேற்று அல்லாத சுதந்திர இயக்குனராக பங்கு வகிக்கின்றார்.அத்துடன் ஒமினிமேண்டல்ஸ் அண்ட் டொலர் கோபரேஷன் நிறுவனத்தின் தலைவராகவும் பங்காற்றுகின்றார்.

திரு.எஸ்.எம்.டி.எச்.சுபசிங்க
இயக்குனர்

திரு.எஸ்.எம்.டி.எச்.சுபசிங்க அவர்கள் சுதந்திர இயக்குனர் ஆக பங்காற்றுகின்றார்.அவர் 2009ம் ஆண்டு சபைக்கு இணைக்கப்பட்டு, 2013ம்ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டார். இவர் இலங்கை முகாமைத்துவ கணக்காளர் சங்கம்(ASCMA) மற்றும் இலங்கை பட்டைய கணக்காளர் கூட்டுறவு(FCA) இலும் இணை அங்கத்தவராக உள்ளார். மேலும் அலுமினியம் இண்டஸ்ட்ரீஸ்,BDO பாட்னர்ஸ் ஆகியவற்றிலும் பங்காளராக உள்ளார்.

திரு.கே.கே.வீரக்கொடி
இயக்குனர்

திரு.கே.கே.வீரக்கொடி அவர்கள்2016ஆம் ஆண்டு சபைக்குஇணைக்கப்பட்டார். இவர் கஸ்பாவ சணச பங்காளர் நம்பிக்கை நிறுவனம் மற்றும் உந்தூருகொட சணச சங்கம் ஆகியவற்றின் தலைவராக கடமையாற்றுகின்றார்.அத்துடன் வரையறுக்கப்பட்ட கொழும்பு மாகாண சணச சங்க கூட்டிணைப்பு இன் இயக்குனராகவும் இலங்கை பாதனிகள் மற்றும் லெதர் உற்பத்திகள் சங்கத்தின் நிறைவேற்று குழு அங்கத்தவர் ஆகவும் உள்ளார்.

திரு.தி.கருணாசேன
இயக்குனர்

திரு.தி.கருணாசேன அவர்கள் நிறைவேற்று அல்லாத சுதந்திர இயக்குனராக 2013 ஆம் ஆண்டு சபைக்கு இணைக்கப்பட்டு மீண்டும் 2016 ஆம் ஆண்டு சுதந்திர பங்காளராக இணைக்கப்பட்டார்.இவர் சணச அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட தலைவராக/ அதிகாரம் பெற்ற பிரதி தலைவராக பங்காற்றுகின்றமையோடு, மக்கள் வங்கியின் அதிகாரம் பெற்ற பொது முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரம் பெற்ற பொது முகாமையாளர் ஆகவும்பணியாற்றுகின்றார். இவர் களனி பல்கலைக்கழகத்தின்பொருளாதார பிரிவில் பட்டதாரி ஆவார்.

திரு.ஜே.வீ.நந்தன குமார
இயக்குனர்

திரு.ஜே.வீ.நந்தன குமாரஅவர்கள்2016ம் ஆண்டு சபைக்குஇணைக்கப்பட்டார் இவர் மிதிகம பிரஜாவருண சணச சங்கத்தின் தலைவர் ஆவார்.