பன்னாட்டு தொடர்புகள்

பன்னாட்டு தொடர்புகள்

Back

சர்வதேச பொருளாதார கூட்டுத்தாபனம்

IFC logo

சர்வதேச பொருளாதார கூட்டுத்தாபனம்

IFC உலக வங்கியின் குழுமத்தை சேர்ந்த இச் சர்வதேச நிறுவனத்தின் நோக்கமானது, வளர்முக நாடுகளின் தனியார்துறை முதலீடுகளை ஊக்குவிப்பது, வறுமையை குறைப்பது, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது,மேலும் GIIF உள்நாட்டு சந்தையில் SME துண்டத்தில் காப்புறுதியை அபிவிருத்தி செய்வது,முக்கியமாக தொழிலாளர்,தொழில் வழங்குனருக்கு காப்புறுதியை வழங்குவது மற்றும் பொருளாதார தொழில்நுட்ப உதவிகளை அளிக்க உதவியது. இத்திட்டம் அமுலாக்க வளர் நிலையிலுள்ளதுடன் மாதிரி சோதனைகள் காலி,கொழும்பு,குருநாகல் மாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஊழியர் அமைப்பு

ILO logo

சர்வதேச ஊழியர் அமைப்பு

ILO ஆனது சர்வதேச ஊழியர் நியமங்களை வரைவதும், கண்காணிக்கும் பொறுப்புக்களையும் கொண்ட அமைப்பாகும்.இது தொழிலுக்குரிய உரிமைகளையும், கண்ணியமான தொழில் வழங்குதலையும் அபிவிருத்தி செய்ய உதவுகின்றது. ILO இற்குரிய நுண்காப்புறுதி திட்டமானது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பல லட்சகணக்கான குறைந்த வருமானம் பெறும் விவாசய தொழிலாளர்களுக்கு வளர்முக நாடுகளில் உதவுகின்றது.திறமான காப்புறுதி திட்டங்களை குறை வருமானம் பெறும் மக்களுக்கு பெரிதும் உதவுகின்றது.காப்புறுதியின் பெறுமதியை வாடிக்கையாளர்களுக்கு தெளிவு படுத்துவதை நோக்காக கொண்டு சணச காப்புறுதி, காலநிலையில் தங்கியுள்ள குற்றசெய்கைக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது.இது 2012 செப்டம்பர் மாதம் முடிவடையும். இது வருடாந்தம் ILO இனால் கண்காணிக்கப்படும்.

The International Cooperative and Mutual Insurance Federation (ICMIF)

ICMIF logo

The International Cooperative and Mutual Insurance Federation (ICMIF)

ICMIF ஆனது நெடுநாள் ஸ்தாபிக்கப்பட்ட தனித்துவமான 70 நாடுகளை சேர்ந்த 220 கூட்டுறவு காப்புறுதியாளர்களின் பூகோள வியாபார சங்கமாகும். ICMIF அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்தல் போன்ற சேவைகளை அளிக்கின்றது. சணசவும் ICMIF இன் மும்முரமான அங்கத்தவராக கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து அதன் குறிக்கோள்களை அடைய உதவிவருகின்றது. தற்போது டாக்டர்.பி.ஏ.கிரிவந்தெனிய, ICMIF இன் அபிவிருத்தி அங்கத்தவராக இருப்பதோடு சணசவினை உலகறிய செய்தலில் பெறும் பங்காற்றினார். இதனை நிரூபிக்கும் பொருட்டு SICL இலும் இரு ICMIF அங்கத்தவர்களும் இணைந்து 2015ல் ஒரு மாநாட்டினை நடத்தினர். 2015 இல் தான் ICMIF 5-5-5 இன் 50 இலட்சத்திலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு காப்புறுதி திட்டத்தை 5 வருடங்களுக்குள் வழங்க திட்டமிட்டது. 5 நாடுகள் 200 தனிநபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்.

The Asia and Oceania Association (AOA)

AOA logo

The Asia and Oceania Association (AOA)

இந்த அமைப்பானது 1984 இல் ஆசியா மற்றும் ஓஷானியா இல் உள்ள ICMIF அங்கத்தவர்களுக்கிடையில் சிநேகபூர்வமான தகவல் பரிமாற்றத்திற்காக அமைக்கப்பட்டது. AOA இன் காரியாலயம் சர்வதேச விடயங்களுக்கான Zenkyoren தேசிய ஒருமித்த விவசாய கூட்டுறவு காப்புறுதி கட்டமைப்பில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஆசிய ஓஷானியா அங்கத்தவர்களின் ICMIF பற்றிய கருத்துக்களை பிரதிபலிக்க உதவுகின்றது. AOA ன் அங்கத்தவர்கள் முழு அங்கத்தவர்கள் ஆகவோ கூட்டு அங்கத்தவர்கள் ஆகவோ ICMIF இன் பார்வையாளர்களாகவோ இருப்பர்கள். டாக்டர்.பி.ஏ.கிரிவந்தெனிய அவர்கள், AOA இன் நிர்வாக அங்கத்தவராக 2005 இலிருந்து தற்போது பிரதி தலைவராக இருக்கின்றார். AOA ஆனது சணசக்கு இங்கிலாந்தில் உயர் முகாமைத்துவ படிப்பிற்கு என வருடத்திற்கு இரு புலமைப்பரிசில்களை கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து அளித்துள்ளது.

Development International Desjardins (DID)

DDI logo

Development International Desjardins (DID)

இது கனடாவில் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகும்.இது தேசிய மற்றும் சர்வதேச தனிநபர் அல்லது சமூகத்தின் பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு நோக்காக கொண்டுள்ளது. இலங்கையில் 2005 சுனாமிக்கு பின்னரான மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு சணச க்கு உதவுகின்றது. இது நுண் காப்புறுதி உற்பத்திகள் சேவைகளுக்கு உதவுகின்றது. மேலும் பொருளாதார தொழில்நுட்ப உதவிகளை சணசவிற்கு அளித்து நெற்பயிர் செய்கைக்கு காலநிலை சுட்டுடன் திட்டத்திற்கு உதவுகின்றது.