CSR

வரையறுக்கப்பட்ட சணச காப்புறுதி கம்பனி/உட்களம்/இளைஞருக்கான உரிமையை வழங்குதல்

இவ் ஆண்டு,மூன்றாம் தரம்சார் கல்வி மட்டத்திற்கான புலமை பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டோம். நமது இப் புலமைப்பரிசில் திட்டத்திற்கான உள்நோக்கமற்ற உண்மையான முறையில் தகுதியானவர்களை தெரிவு செய்ய முன்னணியில் உள்ள எமது இருபது சணச சங்கங்கள் தமது ஒத்துழைப்பினை வழங்கின. க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற அனால் அரச பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு என “மனச வதன சணச” எனும் குறு வினா விடை போட்டியினை நாம் இதன் மூலமாக நடாத்தினோம். அதன்படி மூன்று பேரை கொண்ட 20 அணிகளுக்கிடையில் இக் குறு வினா விடை போட்டி இடம்பெற்று வெற்றி வாய்ப்பினை பெறும் குழுவிற்கு சணச பல்கலைக்கழகத்தில் வங்கித் துறை,காப்புறுதி துறை,பிராந்திய விஞ்ஞானம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் நான்கு வருடத்திற்கான பட்டப்படிப்பினை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.அடுத்து வரும் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் எமது பல்கலைகழகத்தில் டிப்ளோமா கற்கை நெறிகளை கற்கும் வாய்ப்பினையும் வழங்கியது இவ் அனைத்து கற்கை நெறிகளும் இலங்கை பல்கலைகழக ஆணையகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஆகும்.இப் பட்டப்படிப்பு புலமைபரிசில்களுக்காக ரூ.450,000மும் டிப்ளோமா கற்கை நெறி புலமைப்பரிசில்களுக்காக ரூ.100,000 மும் நாம் முதலீடு செய்துள்ளோம்.