CSR

நுண் காப்புறுதிதாரராக எம்மால் சுற்றாடலுக்கு உள்ள தாக்கம் முக்கியமானதாக இல்லாவிடினும் கூட சுற்றாடலை பாதுகாப்பதும் பராமரிப்பதும் எமது ஒன்றுபட்ட கலாசாரம் ஆகும்.நாம் நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் எமது நாளாந்த வியாபார நடைமுறைகள் பசுமை செயற்பாடு நோக்கியதாக இருக்க வேண்டும். முக்கிய அளவீடுகளாக உத்தியோகத்தர்களுக்கும் சுற்றாடல் பற்றிய சமுதாய விளக்கங்களும் அமைய வேண்டும். நாளாந்த செயற்பாடுகளுக்கு புறம்பாக நாம் குறிப்பிட்ட ஆண்டில் சுற்றாடல் பாதுகாப்பு திட்டத்திற்கமைவாக செயற்பாடுகளை கொண்டு செல்வதில் நாம் பெரும் பிரயத்தனம் எடுத்தோம். “எமது தேசத்தைக் காப்போம்” எனும் மனகருத்திற்கு அமைய “துரு செவன” மர நடுகை திட்டம் தேசிய மட்டத்தில் முன் எடுக்கபட்டு, 200 மரங்களை 400 சணச சங்கங்களுடன் இணைந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 16 பாதைகளில் நடவுள்ளோம்.ஐந்து வருட காலத்திற்கு இம் மரங்களை பாதுகாக்கும் பொறுப்பினை சங்கங்களினால் ஏற்கப்பட்டது.இதன் முதற்படியாக 200 “கும்புக்”மரங்களை அனுராதபுர புனித நகரிலுள்ள ருவன்வலி மகா செய மற்றும் மகாமேவன தோட்டத்திலும் நாட்டினோம்.இது பௌத்தர்களின் தாமரி வழங்கும் வருடாந்த விழா காலத்துடன் ஒத்திருந்தது. இச் செயற்பாடுகள் உரிய வணக்கத்திற்குரிய பிரதம மதகுருவின் ஆசிகளுடனும் தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும் நடந்தது.இவ்விழாவிற்கு எமது சணச தலைவரும்,முகாமைத்துவமும்,முக்கிய உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.