பற்றி

பற்றி

Home image
எம்மைப்பற்றி
ஆராய
Home image
தலைமைத்துவம்
ஆராய
Home image
சிறப்பு குறிப்புகள்
ஆராய
Awards
விருதுகள்
ஆராய

சணச காப்புறுதி

'Forum of Development'(FOD) எனும் அரச சார்பற்ற நிறுவனமானது கேகாலை மாவட்டத்தில் வரகாபொல எனும் இடத்தில் காணப்படும் பிரசித்திபெற்ற சேவை அமைப்புக்களை கண்டறிவதற்காக ஒரு கணிப்பீட்டினை மேற்கொண்டது.அவ் வேளையிலேயே சணச காப்புறுதி கம்பனியினை நிறுவுவதற்கான செயற்பாடுகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்1989ம் ஆண்டு எடுக்கப்பட்டது.அச் செயற்பாட்டு திட்டமானது சேவை அமைப்புக்களின் திறன் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு ஆக வடிவமைக்கப்பட்டதாகும்.இதன் மிக முக்கிய பிரிவாக கருதப்பட்ட விடயம். கிராமிய மக்கள் சேவை அமைப்புக்கள் என்ற வகையில் எவ்வாறு ஒன்றிணைந்து நிதி திரட்டப்பட்டு அதனை தேவை ஏற்படும் மக்களுக்கு உதவிக்கரமாக பகிர்ந்தளிப்பது என்பதாகும். இதன் மூலமாக கிராமிய மட்டத்தில் ஈமச்சடங்கு ஆதார சங்கங்கள்தான் பிரசித்தி பெற்றதும் துடிப்பானதும் மேலும் அதிகளவிலான மக்களுக்கு அதிகளவிலான பங்களிப்பினை கொண்டதுமாக வழங்கவல்லது என கண்டறியப்பட்டது.

இதன்படி FODஅமைப்பின் ஊக்கத்தின் காரணத்தினால் ஈமச்சடங்கு ஆதார சங்க அங்கத்தவர்கள் தாமாகவே இணைந்து செயற்படும் வகையில் ஒரு காப்புறுதி திட்டத்தினை செயற்படுத்த எண்ணினார்கள். அவ்வாறே “அஹேதுக விபத் ஆவரணய“ (அசாதாரண சூழ்நிலைகளுக்கான ஆபத்தை ஈடுசெய்தல்) எனும் காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.இத் திட்டத்தின் அடிப்படையில் காணப்பட்ட அனுகூலங்களாக வீதி விபத்து ,தொழில் ரீதியிலான ஆபத்துக்கள்,மரங்கள் மற்றும் உயர்ந்த இடங்களில் இருந்து கீழே விழுதல்,நஞ்சு அருந்தல்,தீ,வெள்ளம்,பாம்புக்கடி போன்றனவற்றால் ஏற்படும் மரணம் மற்றும் அங்கவீனம் என்பனவாகும்.இக் காப்புறுதி திட்டத்திற்கான தவணைக் கட்டுப்பணமாது ரூ.5 முதல் ரூ.20 வரையில் காப்புறுதியாளர் ஏற்றுகொண்ட காப்பீட்டு தொகையின் அடிப்படையில் வேறுபடும்.

இத் திட்டமானது1991ம்ஆண்டு ஒக்டோபர் மாதம் சணச சங்கங்களின் அங்கத்தவர்கள் மற்றும் ஈமச்சடங்கு ஆதார சங்கங்க அங்கத்தவர்கள் என 182உறுப்பினர்களுடன் பங்குடமையாக தொடங்கி வைக்கப்பட்டது.இதன் குறுகிய காலத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சி காரணமாக சணச ஆனது இதனை அரச அனுமதி பெற்ற காப்புறுதி வணிகமாக மாற்ற எண்ணி அவ்வாறே அனுமதி பெற்ற காப்புறுதி வணிகமாக 2003ம்ஆண்டு முதல் ஆயுட் காப்புறுதியினையும் 2005ம் ஆண்டு முதல் பொது காப்புறுதியினையும் ஆரம்பித்தது